×

குழந்தைகள் பங்கேற்ற நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை, நவ. 27: நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ”கிட்ஸ் வாக்கத்தான் – கிட்டத்தான் 2023” விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க்கில் நேற்று நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் ரேஸ்கோர்ஸ் சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 150 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி நடந்து சென்று சிறார் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இது குறித்து டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோ டைனமிக் தலைவர் ரேஷ்மா ரமேஷ் கூறுகையில், ‘‘ஐ.சி.எம்.ஆர் 2022-ல் தேசிய ஆய்வின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15 ஆயிரம் பேர் புதிய வகை-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காவிட்டால் காலப்போக்கில் இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும்.

டைப் – 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை மெட்ரோ டைனமிக்ஸின் ரோட்டரி இ – கிளப் மற்றும் இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து, ‘கிட்டத்தான் 2023’ என்ற வாக்கத்தானை கோவையில் முதன் முதலாக நடத்தியுள்ளோம். அறக்கட்டளையுடன் இணைந்து சுமார் 1 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி சிறார் நீரிழிவு உபகரணங்களை வழங்கியுள்ளோம்’’ என்றார்.

The post குழந்தைகள் பங்கேற்ற நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாக்கத்தான் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kids Walkathon – ,Kidathon 2023 ,Diabetes awareness walkathon ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...